"சூடானில் உள்நாட்டு போரை தவிர்க்கவே ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது" - ராணுவ தளபதி பேச்சு
சூடானில் உள்நாட்டு போரை தவிர்க்கவே ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக ராணுவத் தளபதி Gen Abdel Fattah al-Burhan தெரிவித்துள்ளார்.
பிரதமர் அப்தல்லா ஹம்தக்கின் இடைக்கால அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் முக்கிய அதிகாரிகளை கைது செய்தது. ராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோமில் திரண்ட மக்கள் டயர், வாகனங்களை தீயிட்டு கொளுத்தி ராணுவத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர்.
மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தாகாவும், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments